காமராஜரை மறந்த சோனியா காந்தி- தமிழிசை ஆதங்கம்

சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி சொல்லாதது ஏன்? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி சொல்லாதது ஏன்? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் திருமதி.சோனியா காந்தி பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்கள்.
ஆனால் கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர், கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com