சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கியது!
சேலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.


சேலம்: சேலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.
விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையில், உதான்-5 திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்தில் இருந்து சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் இன்று முதல்கட்டமாக விமானம் இயக்கப்பட்டது.
இந்த விமானம் மறு மார்க்கமாக கொச்சின்-சேலம்-பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும்.
இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு வருகைதந்த விமானத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து கொச்சின் செல்லக்கூடிய விமானத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும், அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூரு-சேலம்-ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்-சேலம்-பெங்களூரு வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...