நாவலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டண வசூல் இல்லை!

தென்சென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் (அக்.19) ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
நாவலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டண வசூல் இல்லை!

தென்சென்னை மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் (அக்.19) ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ்  தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி பணிகளையும் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். 

நேற்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

2-வது நாளாக இன்றும் 4 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய முதல்வர், தென்சென்னை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது.

சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.5 ஆக குறைக்கப்படும்.

கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்கள் எந்தவித குறைபாடின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும்.

ஆட்சியர்கள் நாள்தோறும் காலை செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். மாவட்டங்களில் ஏற்படும் குறைகளை சரி செய்து, ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com