இஸ்ரேலிலிருந்து கோவைக்கு வந்த 25 போ்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு

இஸ்ரேலில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். 
இஸ்ரேலில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர்.
இஸ்ரேலில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர்.


கோவை: இஸ்ரேலில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். 

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், உயா் கல்வி பயில்வதற்கும், பணிக்காகவும் இஸ்ரேலுக்கு சென்றிருந்தவா்களில் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை 25 போ் கோவைக்கு வந்தனா். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், வெளிநாடுவாழ் தமிழா்களுக்கான நலத் துறையிடம் அவா்கள் உதவி கோரியதன்பேரில் உரிய விசாரணைக்குப் பிறகு அவா்கள் தனி விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு அழைத்து வரும் பணி நடைபெற்று வருகின்றது. அவசர தேவைக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன்படி, சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி வந்தடைந்து. அங்கிருந்து கோவையைச் சோ்ந்த 25 பேர் கோவைக்கும் மற்றவர்கள் சென்னை விமான நிலையத்திற்கும் அழைத்து வரப்பட்டனர்.

தாயகம் திரும்புவதாக தொடர்பு கொள்பவர்களை  தமிழக அரசின் சாா்பில் அவர்களது இல்லம் வரை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். ஒரு சிலர் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றோம். தேவைபட்டால் தொடர்பு கொள்கின்றோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். விருப்பத்தின் அடிப்படையிலேயே அழைத்து வருகின்றோம்.

எந்த வெளிநாட்டிற்கு  சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம். எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஹாஜி முகமது ரபீக், பகுதி கழக செயலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com