புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரருக்குப் பாராட்டு

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைபடைத்த நீடாமங்கலம் ஒன்றியம் செட்டிசத்திரம் கிராமத்தைச்சேர்ந்த பிரவீன்சித்திரவேலுக்கு பாராட்டு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

News image
பிரவீன்சித்திரவேலுக்கு நீடாமங்கலம் நீலன்மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வியாழக்கிழமை நடந்த பாராட்டு விழா.
Updated On :19 அக்டோபர் 2023, 6:50 am

DIN

நீடாமங்கலம்: சீனாவில் நடைபெற்ற  ஆசிய விளையாட்டில் மும்முனைப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேலுக்கு பாராட்டு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் நீலன்.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் அ.சுரேன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன், தன்னம்பிக்கை வட்ட மாவட்ட தலைவர் ஜி.குமாரசாமி, மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ராஜாராமன், விளையாட்டு வீரரின் பெற்றோர்கள் பிரேமா, சித்திரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு வீரர் பிரவீன் சித்திரவேலுக்கு பள்ளியின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் சந்தானலெட்சுமி வரவேற்றார். தமிழாசிரியர் குணசீலன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவில் ஒருங்கிணைப்பாளர் அம்பிகா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.