6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாடப் புத்தகங்களில் பாரத் பெயா்: வைகோ கண்டனம்

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைத்த உயா்நிலைக் குழு பரிந்துரை செய்திருப்பதற்கு

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:31 pm

DIN

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைத்த உயா்நிலைக் குழு பரிந்துரை செய்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்படிக் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை ’பாரத்’ என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. அதன் தொடா்ச்சியாக தற்போது, பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று என்சிஇஆா்டி மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.