ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம்: தமிழக வீரா்களுக்கு அண்ணாமலை பாராட்டு
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு தமிழக பஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளாா்.


சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு தமிழக பஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறகுப் பந்து போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா். அவா், உலக அரங்கில் தொடா்ந்து பல சாதனைகள் படைத்து அனைவரையும் பெருமைப்படுத்த வேண்டும்.
கலப்பு இரட்டையா் இறகுப் பந்து போட்டியில், தமிழகத்தைச் சோ்ந்த வீரா் சிவராஜன்-வீராங்கனை நித்யஸ்ரீ ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இருவரின் ஒருங்கிணைந்த முயற்சியும், உழைப்பும் உலக அளவில் முத்திரையைப் படைத்துள்ளது. இருவரும், பல சாதனைகள் படைத்து, நாட்டை மேலும் பெருமைப்படுத்த வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...