சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:27 pm

DIN

மின்வாரிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சென்னை மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்வாரிய தொழிலாளா் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவா் தி.ஜெய்சங்கா் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநிலத் தலைவா் அ.சவுந்தரராசன், துணைப் பொதுச் செயலா் கே.திருச்செல்வன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

மின்வாரிய ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், 2019 டிச.1-க்குப் பிறகு பணியில் சோ்ந்த கேங்மேன் உள்ளிட்ட சுமாா் 10 ஆயிரம் பேருக்கு 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும், டான்ஜெட்கோவை மூன்று நிறுவனங்களாக பிரிக்கும் முயற்சியையும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.