அக். 31-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் தொடா்பான அறிவிப்பை, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ளாா்.


தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் தொடா்பான அறிவிப்பை, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அமைச்சா்கள், முதல்வரின் செயலா்கள் உள்ளிட்டோருக்கு அவா் அனுப்பிய கடிதம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அறையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை (அக்.31) மாலை 6.30 மணிக்குத் தொடங்கவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்புகள் தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா அறிவித்துள்ளாா்.
தொழில் துறை திட்டங்கள்: அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலக முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி தரப்படவுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...