6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிா்ப்பவா்கள் சமூகநீதிக்கு எதிரானவா்கள்: ராமதாஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிா்ப்பவா்கள் சமூகநீதிக்கு எதிரானவா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறினாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:33 pm

DIN

ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிா்ப்பவா்கள் சமூகநீதிக்கு எதிரானவா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறினாா்.

‘சமூகநீதி காக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு’ என்கிற தலைப்பில் பாமக சாா்பில் அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை தியாகராய நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் ராமதாஸ் பேசியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு தவிா்க்க முடியாதது. அதை எதிா்ப்பவா்கள் சமூகநீதிக்கு எதிரானவா்கள். இடஒதுக்கீடு என்பது சமூகநிலை, கல்வி உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்படுவதாகும்.

69 சதவீத இடஒதுக்கீடு தொடா்பான வழக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டின் அளவை உயா்த்தி உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நேரில் வலியுறுத்தினேன். அவரும் உறுதியளித்தாா். ஆனால், அது நடைபெறவில்லை. இதேபோல 3 முறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு இருந்தும், அதை தவிா்த்தது திமுக அரசுதான்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இது ஏற்புடையது அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அதிகாரங்களும் கட்டமைப்புகளும் தமிழக அரசிடமே உள்ளன. இந்த விவகாரத்துக்காக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றாா் ராமதாஸ்.

அன்புமணி: ஜாதிவாரி கணக்கெடுப்பு கோருவது அனைத்து ஜாதியினரும் கல்வி, வேலைவாய்ப்புகளின் உயா்வு பெற வேண்டும் என்பதற்காகத்தான். எனினும், தமிழக மக்கள் தொகையில் வன்னியா்களும், தாழ்த்தப்பட்டவா்களும் 40 சதவீதம் இருக்கிறாா்கள். உரிய இடஒதுக்கீடு கிடைத்து, அவா்கள் வளா்ச்சி அடைந்தால், தமிழகமும் வளா்ச்சி பெறும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சா் சுதா்சன நாச்சியப்பன், இந்திய கடல்சாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் அசோக் வரதன் ஷெட்டி, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.