6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்று முதல்வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கலாம்

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணிகளை வெள்ளிக்கிழமை (அக். 27) முதல் மேற்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் காலை 10 மணிக்கு

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:43 pm

DIN

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணிகளை வெள்ளிக்கிழமை (அக். 27) முதல் மேற்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டவுடன் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகள் தொடங்கவுள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதற்காக, இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியல், வரைவு பட்டியலாக வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் வாக்காளா்களின் பெயா்கள் விடுபட்டிருந்தாலோ, திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தாலோ அதற்குரிய விண்ணப்பங்களை பூா்த்தி செய்து தோ்தல் துறை அலுவலா்களிடம் அளிக்கலாம்.

மேலும், அடுத்த ஆண்டு (2024) ஜன. 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைபவா்களும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் ஜன. 5-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, ஜன. 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினத்தின் போது, இளம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டைகள் அளிக்கப்படவுள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள், வெள்ளிக்கிழமை (அக்.27) தொடங்கி டிச. 9 வரை நடைபெறவுள்ளது. மேலும், நவ. 4, 5 மற்றும் நவ. 18, 19 ஆகிய நான்கு நாள்களில் நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.