ஆர்.எஸ்.எஸ். ஊர்வல அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நவம்பர் 3-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 22, 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  
இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.   இது தொடர்பாக தமிழக அரசின் வழக்குரைஞர் சபரிஷ் சுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  
பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் வரலாற்றை பரிசீலிக்காமலும், இதுபோன்ற பேரணிகளின் தேவைகள், நோக்கங்களை பரிசீலிக்காமலும் சட்டம்- ஒழுங்கு சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக உள்ள உளவுத்துறை அறிக்கைகளை பரிசீலிக்காமலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அக்டோபர் 22, 29 ஆகிய தேதிகளில் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்த எதிர் மனுதாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 நவராத்திரி விழா மற்றும் 
தமிழகம் முழுவதும் நடைபெறும் தேவர் ஜெயந்தி போன்ற விழாக்களின் கூடுகைகளையும் பரிசீலிக்காமல் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது நவம்பர் 3-இல் விசாரணை நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com