தமிழகத்தில் உள்ள சுமார் 26 சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு காரணமாக உணவுப் பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, புதன்கிழமை முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டதால் மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் ரூ.92.50 குறைந்த நிலையில், இந்த மாதம் ரூ.157.50 குறைந்து, வெள்ளிக்கிழமை முதல் (செப் 1) ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுவதால் உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி உள்ளிட்ட சுமார் 28 சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் குறைந்தது ரூ.5 முதல் ரூ.65 வரை கட்டணம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டி ஓட்ட ரொம்ப கஷ்டப்பட்டு வரும் நிலையில், அதிகரித்துள்ள சுங்கக் கட்டணத்தால் வாகன ஓட்டிகள், லாரி ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வால், உணவுப் பொருள்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்

வணிக பயன்பாடு சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை

திருவாரூா் வழியாக ரயிலை இயக்கக் கோரி கடையடைப்பு
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

