தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப் 7,8 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.9 - கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்கள் இன்று(செப்.6) தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

எந்த இடத்திலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது : மும்பை உயா்நீதிமன்றம்
இனி வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை! அவசர கால உதவியை விரைந்து பெறலாம்

அடுத்த இரு நாள்களுக்கு நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

