ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்


சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் மே 7, 1861 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவர் கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என்ற பன்முகத்திறன் கொண்டவர். இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1913-ல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ படைப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்று, ஆசியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பெற்றார். அனைவராலும் ‘குருதேவ்’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இயற்றிய “ஜன கண மன” பாடல் இந்தியத் திருநாட்டின் தேசிய கீதமாக விளங்குகிறது. 1919ல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து, இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஆங்கிலேய அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.  

இத்தகைய சிறப்புமிக்க கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், இந்தியத் திருநாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவருமான வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு சென்னை, இராணி மேரி கல்லூரியில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, இராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, அவரது திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com