ஜி20 மாநாடு: தில்லி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) காலை தில்லி புறப்பட்டுச் சென்றார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(சனிக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றார். 

இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப். 9, 10) நடைபெறுகிறது.

மாநாட்டையொட்டி, உலகத் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, உச்சிமாநாடு நடைபெறும் பாரத மண்டப வளாகத்தில் சனிக்கிழமை இரவு விருந்து அளிக்கவுள்ளாா். முன்னாள் பிரதமா்கள், மாநில முதல்வா்களுக்கும் இரவு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று(சனிக்கிழமை) காலை விமானம் மூலமாக அவர் தில்லி புறப்பட்டுச் சென்றார். 

குடியரசுத் தலைவர் அளிக்கும் இந்த விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com