எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகளிர் உரிமைத்தொகை: செப்.11ல் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :9 செப்டம்பர் 2023, 11:04 am

DIN

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டமானது, செப்டம்பா் 15-ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலமாக வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. முதல் கட்ட முகாம்கள் ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடந்தது.

இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடந்தது. 

இதன்பின், ஆகஸ்ட் 18 முதல் 20-ஆம் தேதி வரையில் மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் நடந்தன. அனைத்து முகாம்களிலும் சோ்த்து மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கைப்பேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, விண்ணப்பதாரா்கள் அளித்த தகவல்களை அரசு களஆய்வு மேற்கொண்டது. 

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.