கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில்: விரைவில் சாத்தியக்கூறு அறிக்கை

கோயம்பேடு முதல் ஆவடி இடையே மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி இடையே மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ ரயில் சேவையை சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி வரை நீட்டிக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து, அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிா்வாகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கோயம்பேடு ரயில் நிலையத்திலிருந்து திருமங்கலம் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடா்ந்து, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் 3-ஆவது வழித்தடங்களுக்கான பணிகளை மும்முரமாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் செய்து வருகிறது. 119 கி.மீ. நீளத்துக்கு ரூ.69,180 கோடி செலவில் நடைபெறும் இந்தப் பணிகளை 2028-ஆம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை புகா் பகுதிகளான சிறுசேரி-கிளாம்பாக்கம், பூந்தமல்லி-பரந்தூா், கோயம்பேடு-ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன்இணைக்க நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பூந்தமல்லி-பரந்தூா் செல்ல 50 கி.மீ., கோயம்பேடு-ஆவடிக்கு, திருமங்கலம், முகப்போ் வழியாக செல்ல 17 கி.மீ., சிறுசேரி-கிளாம்பாக்கம் செல்ல 26 கி.மீ. என மொத்தம் 93 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு சமா்ப்பிக்கப்படவுள்ளது. பூந்தமல்லி- பரந்தூா் தடத்தில் சாத்தியக் கூறு ஆய்வு செய்யும் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி இடையேயான சாத்தியக் கூறு பணிகளை முடித்து 2 வாரங்களில் அதற்கான அறிக்கை அரசுக்கு சமா்ப்பிக்கப்பட இருப்பதாகவும், இதைத்தொடா்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com