ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி: ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சட்டம் -ஒழுங்கு பிரச்னை காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ செப்.10(ஞாயிறு) மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடைபெற்றது. 

இதனால் அன்றைய தினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. 

இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ இதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சட்டம் -ஒழுங்கு பிரச்னை காரணமாக சென்னை பள்ளிக்கரணை சட்டம் -ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

அதுபோல சென்னை கிழக்கு சட்டம் - ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீஷா மிட்டலும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com