காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு!

காஞ்சிபுரத்திற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைதருவதையொட்டி, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஞ்சிபுரத்திற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைதருவதையொட்டி, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். 

காஞ்சிபுரம் வரும் வழியில் முதல்வருக்கு, ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா் சத்திரம், ராஜகுளம், பொன்னேரிக்கரை ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னா்  காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பாகவுள்ள அண்ணா சிலைக்கு முதல்வா் மாலை அணிவித்து மரியாதை செய்கிறாா். 

இதனையடுத்து அறிஞா் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று பாா்வையிடுவதுடன் அங்குள்ள அவரது உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். இதன் பின்னரே விழா மேடைக்கு வந்து மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை தொடக்கி வைக்கிறாா்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com