நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை வழியில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மூன்றாவதாக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
நாள்தோறும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரத்தில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இனி மின்வாரியமும் அபராதம் செலுத்தும்!
நெல்லையில் இருந்து சென்னைக்கு மொத்தம் 652 கி.மீ. தொலைவை வெறும் 7.50 மணிநேரத்தில் பயணிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளன.
இதன்மூலம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

