விலகுகிறது தென்மேற்குப் பருவமழை : வானிலை மையம்

தென்மேற்குப் பருவமழை படிப்படியாக விலகுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விலகுகிறது தென்மேற்குப் பருவமழை : வானிலை மையம்


புது தில்லி: இந்தியா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் கடும் சேதத்தையும், தென் மாநிலங்களில் திடீரென பெய்து பிறகு மறைந்து வந்த தென்மேற்குப் பருவமழை விலகுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட இந்திய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து, பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் வட -மேற்கு இந்திய மாநிலங்களிலிருந்து செப்டம்பர்  25 முதல் தென்மேற்குப் பருவமழை விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்குப் பருவமழை விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையானது கடந்த ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி படிப்படியாக ஜூலை 8ஆம் தேதி இதர மாநிலங்களுக்கும் முழுமையாக பரவியது.  இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்தமாக பருவமழை விடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பருவமழைக் காலத்தில், இந்தியாவுக்க 780.3 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இயல்பான அளவு 832.4 மி.மீ. ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com