வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: அண்ணாமலை பேட்டி

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: அண்ணாமலை பேட்டி
Published on
Updated on
1 min read


கோவை: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தை தொடங்கி பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மக்களைச் சந்தித்து வருகிறாா். அதன்படி, கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த நடைப்பயணத்தின் போது, வருகிற 2024 மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார். தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் மக்களவைக்கு கொண்டுச் செல்வோம். 

வரும் தேர்தலில் பாஜகவின் வெற்றியை தடுக்கும் பொய் பிரசாரங்கள் அவிழ்த்து விடப்படும். அதனை நாம் முறியடிக்க வேண்டும் என்றார்.

2014 ஆம் ஆண்டு உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆவது இடத்திற்கு கொண்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 

சனாதன தர்மம் என்ன என்பது தெரியாமலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் திறமையான நடிகர். ஆனால் தற்போது திமுகவில் சேருவதா அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவதா என்ற குழப்பத்தில் இருந்து வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com