கொளத்தூர் - நாதமுனி இடையே மெட்ரோ சுரங்கப் பணி: 2024ல் தொடங்கும்!

கொளத்தூர் - நாதமுனி இடையே 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி 2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் - நாதமுனி இடையே மெட்ரோ சுரங்கப் பணி: 2024ல் தொடங்கும்!


சென்னை: கொளத்தூர் - நாதமுனி இடையே 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி 2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுமார் 61 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன. 116 கி.மீ. தொலைவில் 118 ரயில் நிலையங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், இரண்டாம் வழித்தடத்தில் மிகவும் சிக்கலான பணியாக, கொளத்தூர் - நாதமுனி இடையே 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியானது கண்டறியப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதை தோண்டும் பணிகளுக்காக, திட்டமிடப்பட்ட இடத்தில் ஏற்கனவே தடுப்புகள் உருவாக்கப்பட்டு, சாலை வேறு பாதைகளில் திருப்பி விடுவதற்கான ஏற்பாடுகளும், தரைப்பகுதியில் இருக்கும் பல்வேறு இணைப்புகளை மாற்றியமைக்கும் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது.

பொறியாளர்களுக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது, பாறைகள் நிறைந்த இந்த இடத்தில் இரண்டு சுரங்கப் பாதைகள், 5 ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன. அதாவது, கொளத்தூர் சந்திப்பு, ஸ்ரீனிவாசா நகர், வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி என 5 ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன.

மாதவரம் பால் பண்ணை முதல் சோளிங்கநல்லூர் வரையிலான 44.6 கிலோ மீட்டர் கொண்ட வழித்தடத்தில் இந்த 5 கிலோ மீட்டர் பாதை மட்டுமே நிலத்துக்கடியில் அமையவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் சுரங்கம் அமைத்து ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தரைப்பகுதியில் இருக்கும் மின்சார, கழிவுநீர், குடிநீர் இணைப்புகளை முதலில் மாற்றியமைக்க தனியார் அமைப்பு ஈடுபடுத்தப்படவிருக்கிறது. பிறகு, போக்குவரத்து மாற்றிவிடப்படும். பிறகு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி, ரயில் நிலையங்களுக்கான டி-சுவர் எழுப்பும் பணிகளுக்கு நான்கு மாதங்கள் வரை ஆகும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே, இவ்வழித்தடத்தில் பணிகள் முழு வீச்சில்நடைபெற்று வரும் நிலையில், சுரங்கம் அமைக்கும் பணி கடைசியாக தொடங்கவிருக்கிறது. ரயில் நிலையங்களுக்கான சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டு பிறகு மொத்த பணிகளும் தொடங்கும். இந்த சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகளுக்கே கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com