புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரும் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் வெள்ளிக்கிழமை நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இதில், காரில் சென்ற 5 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராஜேஸ்வரி என்ற பெண்மணியும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

பேருந்துக்கு அடியில் சிக்கி உள்ள காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அந்த பகுதி மக்கள்.
இதையும் படிக்க | பாலாறு குடிநீர் குழாய் பழுது: லட்சக்கணக்கான லிட்டர் நீர் வீணாகிறது!
விபத்தில் இறந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


