நிலவில் வண்டி ஓட்டும் அனுபவம் வேண்டுமா?

சென்னையில் ஒரு சில ஆண்டுகளாகவே, முக்கிய பகுதிகளை இணைக்கும் இணைப்புச் சாலைகள் படுபயங்கரமாகக் காட்சியளிக்கின்றன.
சாலைகள்..
சாலைகள்..


சென்னையில் ஒரு சில ஆண்டுகளாகவே, முக்கிய பகுதிகளை இணைக்கும் இணைப்புச் சாலைகள் படுபயங்கரமாகக் காட்சியளிக்கின்றன.

ஓட்டுநர் உரிமம் பெற ஏன் எட்டு போட வேண்டும் என்பதை, இதுபோன்ற பல்லாங்குழி சாலைகளில் வாகனம் ஓட்டும்போது ஒவ்வொரு வாகன ஓட்டிகளுமே நான்கு அறிந்திருப்பார்கள்.

பல சாலைகள் முழுவதும் பள்ளங்களாக மாறி, ஒத்தையடிப் பாதைகளாகவும், ஒரு சில சாலைகள், ஒரு பெரிய பள்ளத்தில் செல்கிறீர்களா? இல்லை குட்டிக்குட்டியாக பல பள்ளங்களில் வாகனத்தை ஏற்றி இறக்குகிறீர்களா என வாகன ஓட்டிகளுக்கு மிகச் சிறப்பான இரண்டு வாய்ப்புகளை வழங்குகிறது.

இதில் எதையுமே நாம் தேரிவு செய்துவிடாதபடி, அதே வாய்ப்பில் ஒன்றை தேர்வு செய்துவிட்டு, நமக்கு எதிரே வரும் வாகன ஓட்டியின் மனநிலையை ஸ்கேன் செய்து அதற்கேற்ப ஒதுங்கிச் செல்வதே சாலச்சிறந்தது.

இதில் வாகன ஓட்டிகளின் நிலை ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால், அதே சாலையில் நடந்து செல்வோரின் நிலைதான் பாவம். வாகன ஓட்டிகள் ஒரு சின்ன இடம் கிடைத்தாலும் அதில் நுழைந்துவிடுவதால், எங்கே நடப்பது என்று தெரியாமல் திணறிப்போகிறார்கள் பாதசாரிகள்.

இந்த நிலையில், அறப்போர் இயக்கத்தின் எக்ஸ் பக்கத்தில் நிலவில் வண்டி ஓட்டும் அனுபவம் வேண்டுமா? என்று விடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்கள்.

அதில்,

பல வாகன ஓட்டிகளுக்கும் இந்த விடியோவில் இருக்கும் சாலை ஓரளவுக்கு நன்றாக இருப்பதாகக் கூட தோண்றலாம். அல்லது பலருக்கும் கூட அப்படித்தோன்றலாம். காரணம் அவர்கள் அதை விட மோசமான சாலைகளில் தினந்தோறும் பயணித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே, நிலவில் பயணித்த விக்ரம் லேண்டரும், ரோவரும் கூட, இந்தச் சாலைகளில் பயணிக்க சற்று சிரமப்படும் என்றே நக்கலடிக்கிறார்கள் வலைத்தள மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com