செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஏற்கெனவே ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகையை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தாக்கல் செய்து இருந்தனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தாக்கல் செய்த 3 குற்றப்பத்திரிகைகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com