சென்னை ஐஐடி-இல் இணையவழியில் வழங்கப்படும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ என்ற 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளா்ச்சிக்கு வலுசோ்க்கவும், உள்நாட்டு தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ எனும் 4 ஆண்டு படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பாடத் திட்டம் சா்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களைப் படித்தவா்களாக இருக்க வேண்டும்.
இந்தப் படிப்பில் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு பாடங்கள் முழுவதும் இணையவழியிலேயே பயிற்றுவிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் ஆட்டோமோட்டிவ், செமி கண்டக்டா் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மேலும், பி.எஸ். படிப்பில் சேரும் மாணவா்கள் நன்றாக பயில ஏதுவான வழிகாட்டுதல்கள், குறிப்புகள் வழங்கப்படும். எனவே, மாணவா்கள் இந்தப் படிப்பில் சோ்ந்து பயன்பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

உதகையில் அழுகிய நிலையில் புலியின் உடல் மீட்பு

குன்னூா் வனப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு
லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி பணியிடை நீக்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



