பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குடியரசுத் தலைவர் வருகை: தீவிர கண்காணிப்பில் தெப்பக்காடு யானைகள் முகாம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2023, 7:25 am

DIN

கோவை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Story image

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்  குறும்படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி தம்பதியினரை சந்தித்து உரையாடுவதற்கும், யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பார்வையிடவும், யானை பாகன்களிடம் உரையாடுவதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பிற்பகல் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். 

Story image

இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாம் கடந்த சில நாள்களாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. புது தில்லியிலிருந்து விமானம் மூலம் மைசூர் வரும் குடியரசுத் தலைவர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி அருகேயுள்ள சிங்காராவில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு வர உள்ளார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகிறார். 

Story image

அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 10 கி.மீ. தூரம் குடியரசுத் தலைவர் காரில் பயணிக்கிறார். இப்பகுதி கேரள, கர்நாடக எல்லையையொட்டி உள்ளது. இதனால் கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களும், உதகையிலிருந்து மசசினகுடி, தெப்பக்காடு வழியாக கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகு அனுப்பப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவரிடம் உரையாட உள்ள பொம்மன் - பெள்ளி தம்பதியினர் கடந்த 3 நாள்களாக காவல்துறை கண்காணிப்பில் இருந்தனர்.

Story image

இந்நிலையில் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை நண்பகல் 12 மணியளவில் போலீசார் தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து குடியரசுத் தலைவரின் வருகைக்காக அவர்கள் இங்குள்ள குடிலில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.