
கோப்புப்படம்
சென்னை: உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். அதனை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று கருணாநிதிக்கு உருக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகம் முதல் அண்ணா சதுக்கத்தில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த நிலையில் கருணாநிதிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கமாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | ராகுலைக் கண்டு பாஜக பயப்படுகிறதா?முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி
அதில், தலைவர் கருணாநிதி..! நீங்கள் இருந்து செய்ய வேண்டியதைதான், நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்!
தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களே, அப்படித்தான் இந்தியாவுக்கான குரலை எழுப்ப தொடங்கி இருக்கிறோம். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு.
சுயமரியாதை, சமூகநீதி, சம தர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இந்தியா என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம் என்று உருக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...