கீழடி 9-ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பு ஆணி, கருப்பு-சிவப்பு நிறப் பாணை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் நடைபெற்று வரும் 9-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், சுடுமண் விலங்கின உருவங்கள், கண்ணாடி மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட கூா்முனைகள் உள்பட பல தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி முதல் 9 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 9 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவங்கள், தக்களிகள், ஆட்டக் காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூா்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என பல பொருள்கள் இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை!
மேலும், வெவ்வேறு நிலையிலிருந்த எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



