சென்னை: அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நெல்லை நான்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக, 12 ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி மீது, மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்னையாக கண்டிக்கிறேன்.
பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிக்க | தகுதிநீக்கத்தின்போது துணையாக இருந்தது வயநாடு: ராகுல் காந்தி
சாதி பிரச்னைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் நான்குநேரியில் முன் விரோதம் காரணமாக விவசாயி வானுமாமலை என்பவரின், பெட்டிக்கடைக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியதுடன், 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது.
கலவர பூமியாக மாறியுள்ள நான்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றவும் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


