
கோப்புப்படம்
மணிப்பூர் வாள் வீச்சு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வரும் மணிப்பூர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதல்வர் மணிப்பூரில் இருக்க கூடிய விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு கொடுத்து இருந்தார். முதல்வரின் அழைப்பை ஏற்று வால் வீச்சு வீரர், வீராங்கனைகள் தமிழகம் வந்து உள்ளனர். அவர்கள் இங்கு தங்கி பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
இங்கு இருக்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் சேர்ந்து இவர்களும் பயிற்சி எடுத்து வருகிறார்கள். மணிப்பூரில் இருந்து வேறு வீரர்கள் இதுவரை வரவில்லை.
கடந்த 3 மாதமாக அங்கு அவர்களால் பயிற்சி எடுக்க முடியவில்லை. இந்த முறை ஏனோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இது இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று மணிப்பூர் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு இவர்களுக்கு ரூ.35 ஆயிரம் செலவாகிறது.
இவர்களுக்கு செலவு செய்வதை நாங்கள் பெரிதாக பார்க்கவில்லை முதல்வர் நல்ல எண்ணத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: கட்டணங்கள் பற்றிய வெளிப்படைத் தன்மை தேவை: ஆர்பிஐ
அனைத்து வீரர்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான், நாங்கள் செலவை பெரிதாக பார்க்கவில்லை. முடிந்தவரை விளையாட்டு வீரர்களுக்கு துணை நிற்போம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...