திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மதுரை ரயில் தீ விபத்து: தயார் நிலையில் 5 மருத்துவக் குழுக்கள் - மா. சுப்பிரமணியன்

மதுரை ரயில் ​விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளதாக  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 2:16 pm IST

மதுரை:  மதுரை ரயில் ​விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளதாக  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை ரயில் நிலையம் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

Story image

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள்,   மதுரை ரயில் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

6 பேர் மதுரை ரயில்வே மருத்துவமனையிலும், 2 பேர்  அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள், விரைவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.