தேசிய நல்லாசிரியர் விருது: 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதையொட்டி தேசிய நல்லாசிரியா் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நிகழாண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

நிகழாண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியா் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமாா், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ்.மாலதி ஆகிய இருவரும் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை,
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!

கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்! என்று முதல்வர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com