
தமிழகம் முழுவதும் 35 டி.எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன், தாம்பரம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையரானார். தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன், சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசன், அடையாறு காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: திருச்செந்தூா் ரயில்கள் டிச.31 வரை இயங்காது
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் மோகன், கடலூர் திட்டக்குடி காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.