
கோவையில் ஒருவருக்கு ஜெ.என்.1 கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் ஜெ.என்.1 தொற்று, கோவா, மகராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளத்தைத் தொடா்ந்து தமிழகத்திலும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஜெ.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிபடுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் விளக்கம் அளித்து இருந்தார்.
இதையும் படிக்க: மதுரை - சண்டீகர் ரயில் 8 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!
இந்த நிலையில், கோவை புலியங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு இருந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஜெ.என்.1 வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.