ஈரோடு அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மோடி, பாஜக தலைவர்கள் படமின்றி பேனர்!

பதாகையில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் படம் இல்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனைய திறந்து அதிமுக அதிரடி காட்டியுள்ளது.  
ஈரோடு அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மோடி, பாஜக தலைவர்கள் படமின்றி பேனர்!

ஈரோடு: பதாகையில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் படம் இல்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனைய திறந்து அதிமுக அதிரடி காட்டியுள்ளது.  

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என யாருக்கு ஆதரவு என தெரிவிக்காமல் பாஜக காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனையை அதிமுக திறந்துள்ளது.

இதையும் படிக்க: எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?
 
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவப்பிராசாத்,  நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக வேட்பாளரை புதன்கிழமை அறிவித்தது.  தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வேட்பாளர் அறிவிப்பு வெளியானது. அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என உள்ளது. பாஜக முடிவை அறிவிக்காத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனையை அதிமுக திறந்துள்ளது.

இதையும் படிக்க: ஈரோடு கிழக்கு: அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு!
 
இந்த பதாகையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. பாஜக முடிவை பொறுத்து பதாகையை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com