தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 பிப்ரவரி 2023, 4:25 am

DIN

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி  பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருப்பதாவது:

மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50% காலியாக இருப்பதால் தாமதமாகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர்விடும் பணி தொடங்கி உள்ளதால் விரைவில் மாதந்திர மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை அல்ல, முதல்வரின் கோட்டை. அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தாததைப் போல் மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.