தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஈரோடு  கிழக்கு இடைத்தேர்தலில் வரலாறு படைப்போம்: கே.ஏ. செங்கோட்டையன் 

ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

News image
செங்கோட்டையன்
Updated On :7 பிப்ரவரி 2023, 6:36 am

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் கே. எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் பிரச்சாரம் நடந்தது. 

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. தொடக்க நாளே குபேர மூலையில் பிரசாரம்  தொடங்கப்பட்டு உள்ளன. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும் , வெற்றியை பெருகுவது ஆகும்.  

திண்டுக்கல்  இடைத்தேர்தல் போல்  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். புதன்கிழமை வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.

அதிமுக வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்.   ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி  வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.