45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு!

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2023, 6:15 am

DIN

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே 3 நாள்கள் முடங்கிய நிலையில் 4-வது நாளாக அமளி காரணமாக நாடளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்த மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஒத்திவைப்புத் தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததையடுத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராகவும், அதானி குழுமத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். 

இதையடுத்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைக் கைவிடாததால், நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.