உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையும் படிக்க | இபிஎஸ்ஸுக்கு இது தற்காலிக வெற்றிதான்: டிடிவி தினகரன்
உச்சநீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வந்துள்ளது ஓபிஎஸ் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவை கூட்டியதுதான் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாறாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சொல்லவில்லை.
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

ரூ.53.18 லட்சம் தங்கப் பசை பறிமுதல்: விமான நிலை ஊழியா் கைது

பெருங்குடி, கொடுங்கையூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றம்: தமிழக அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

270 கி.மீ. தொலைவிலான சாலைகளைப் பலப்படுத்தப்படும்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


