தொடர்ந்து குறைந்துவரும் தங்கம் விலை: மகிழ்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த இரண்டு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், தற்போது சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி 24ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.5,235ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.70.90 ஆகவும், ஒரு கிலோ ரூ.600 குறைந்து ரூ.70,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மூன்று வாரங்களில் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.1000-க்கும் மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...