பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் கிளி வேட்டை: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

பொன்னர்-சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா மற்றும் தங்கை அரிக்காணி என்னும் நல்லதங்காளுக்காக கிளி வேட்டை நடந்த வரலாற்று நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் கிளி வேட்டை: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
Published on
Updated on
1 min read


 
மணப்பாறையில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர்-சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா மற்றும் தங்கை அரிக்காணி என்னும் நல்லதங்காளுக்காக கிளி வேட்டை நடந்த வரலாற்று நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 
கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் - சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அண்ணன்மார்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலிலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதையும் படிக்க | தங்க நகை வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம்...ரூ. 62 இலட்சம்  பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை!
 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, “பொன்னர் - சங்கர் மன்னர்களின் பெற்றோர்கள் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் நல்லதங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க, வீரமலை பகுதிக்கு சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு” பொன்னிவளநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொன்னர் – சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளியை தேடி கிளி அங்கு இல்லாததால் வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் கிளியை கண்டுபிடித்து அதை பக்தர்களிடம் காட்டியபோது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அந்த கிளியை தங்கையிடம் ஒப்படைக்கிறார் பொன்னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com