கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 5 - 8 வரையிலான வகுப்புகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளியில் 5 முதல் 8 வரையிலான வகுப்புகளைத் திறக்க சென்னை உயா் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், இன்று இந்த வகுப்புகளுக்கு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கின. 
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 5 - 8 வரையிலான வகுப்புகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளியில் 5 முதல் 8 வரையிலான வகுப்புகளைத் திறக்க சென்னை உயா் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், இன்று இந்த வகுப்புகளுக்கு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கின. 

182 நாள்களுக்குப் பிறகு, ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்தனர்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த மாணவி மரணமடைந்ததை அடுத்து, கடந்த ஜூலை 17-ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரா்கள் பள்ளி உடைமைகளை சேதப்படுத்தியும், தீ வைத்தும் சூறையாடினா்.

இதைத்தொடா்ந்து அந்த பள்ளி மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்கக் கோரி பள்ளித் தாளாளா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், கடந்த டிச. 5-ஆம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகளைத் தொடங்க அனுமதியளித்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி காா்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிா்வாகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘மாணவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிரந்தரமாக இரண்டு உளவியல் ஆலோசகா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் மாவட்ட ஆட்சியா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘பள்ளியின் நிலைமை தற்போது சீராக உள்ளது. பள்ளிக்கு உதவி ஆய்வாளா் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 5 முதல் 8-ஆம் வகுப்பு வரையான மாணவா்களுக்கு வகுப்புகளைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா். மேலும் மற்ற வகுப்புகளை திறப்பது குறித்து பின்னா் முடிவு செய்யலாம் எனக் கூறிய நீதிபதி, விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

மேலும், பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கியிருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com