சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்பு 

காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்கப்பட்டு அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது. 

News image
Updated On :13 ஜனவரி 2023, 3:24 pm

DIN

காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்கப்பட்டு அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது. 

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும் உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் ராஜிநாமா ஏற்கப்பட்டு அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.