கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பொங்கல் தேரோட்டம்!

சாரங்கபாணி பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருள, தை பொங்கல் தேரோட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பொங்கல் தேரோட்டம்!


தஞ்சாவூர்: 108 வைணவ திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3 ஆவது தலமாகமாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் பொங்கல் தேரோட்டம் வெகுமிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் 108 திவிய தேசங்களில் ஒன்றானது. ஸ்ரீரங்கம், திருப்பதி திவ்ய தேசங்களுக்கு அடுத்ததாக ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மூன்றாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது.

இக்கோயிலில் சங்கரமண பிரமோற்சவம்  (எ) தை பொங்கல் தேரோட்டத் திருவிழா கடந்த 7 ஆம் தேதி திங்கள்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

9 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தை பொங்கலை முன்னிட்டு  உற்சவர் சாரங்கபாணி பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள, தை பொங்கல் திருதேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

அதிகாலையே ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாரங்கா சாரங்கா என்று தேரை இழுக்க தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சங்கரமண பிரமோற்சவம்  (எ) தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேதராய் தேரில் எழுந்தருள, தை பொங்கல் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சாரங்கா சாரங்கா என்று தேரை இழுத்து வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com