வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(ஜன. 17) திறந்திருக்கும்! கூடுதல் ஏற்பாடுகள் தீவிரம்

பொங்கல் திருநாளையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(ஜன. 17) திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

பொங்கல் திருநாளையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை(ஜன. 17) திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கமாக பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும். 

ஆனால் தற்போது பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலையொட்டி மக்கள் வருகை இருக்கும் என்பதால் அன்றைய தினம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மக்கள் அதிகம் கூடுவதால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கூடுதலாக 20 டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்படும் என்றும் 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com