நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜனவரி 2023, 8:55 am IST

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பை புல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. 

Story image

முன்னதாக உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம்,சேஷ வாகனம், தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இவ்விழாவில், ஜன.30 ஆம் தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜன.31 ஆம் தேதி காலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 

அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.