இடைத்தேர்தல்: இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற 7 மணி நேர ஆலோசனை நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் 7 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது.
இடைத்தேர்தல்: இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற 7 மணி நேர ஆலோசனை நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் 7 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.

இதனையடுத்து, அரசியல் கட்சிகள் பலவும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பது மற்றும் கட்சிகளில் ஆதரவு திரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமையில் 7 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை நிறைவு பெற்றது. 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தலில் அதிமுக-வின் அடுத்தக்கட்ட முடிவு குறித்தும், வேட்பாளர் யார் என அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. 7 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 6 வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிமுக தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com